இந்தியாவின் தங்க மகனுக்கு கோடிகோடியாக கொட்டும் பரிசு மழை.. மகிழ்ச்சியின் விளிம்பில் நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு திரும்பிய திசைகளில் இருந்து கோடி கோடியாக பணம், சொகுசு கார், பங்களா போன்றவற்றை பரிசாக குவித்து வருகின்றனர்.
டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 87.58 மீ. ஈட்டியை செலுத்தி தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். இவரை இந்தியாவின் தங்கமகன் என்று அழைத்து அனைவரும் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் இவர் திரும்பிய திசைகள் எல்லாம் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டி வருகின்றது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியாணா முதல்வர் ரூ.6 கோடி, பஞ்சாப் முதல்வர் ரூ.2 கோடி, பிசிசிஐ நிறுவனம் ரூ.1 கோடி, சிஎஸ்கே அணி சார்பாக ரூ.1 கோடி, எலான் குழுமம் ரூ.25 லட்சம் மற்றும் மணிப்பூர் அரசு ரூ.1 கோடி வழங்க முன்வந்துள்ளனர்.
இண்டிகோ நிறுவனம் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 2022ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இலவசம் என்று கூறியுள்ளது.
மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.