பாகிஸ்தான் பனிச்சரிவு... பிரித்தானிய மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உடல் மீட்பு
பாகிஸ்தானின் பிராட் பீக் (Broad Peak) மலையில், புகழ்பெற்ற பிரித்தானிய-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புர்ஜாவும் ஒருவர்
மலையில் சுமார் 5,700 மீற்றர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தானின் 'ஆல்பைன் கிளப்' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது; அங்கு மேலும் மூன்று உடல்கள் காணப்பட்ட போதிலும், அவற்றின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்த 10 பேரில் 43 வயதான புர்ஜாவும் ஒருவர் என்று, அவரின் நிறுவனமான 'எலைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' (Elite Expeditions) சனிக்கிழமையன்று அவரது இறப்பை அறிவித்தது.
அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் வேல்ஸ் இளவரசரும் ஒருவர். நேபாளத்தில் பிறந்து பின்னர் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய புர்ஜா, 2019-ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் வெறும் ஆறு மாதங்களுக்குச் சற்று அதிகமான காலத்திற்குள் ஏறி முடித்ததற்காக பிரபலமடைந்தவர்.
புர்ஜாவின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அவருடன் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கீஸ், ஓமனைச் சேர்ந்த நதிரா அகமது அப்துல்லா அல் ஹார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புர் பகதூர் குருங் ஆகிய மூவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 மலைச்சிகரங்கள்
பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில், உலக சாதனையாளர் நிர்மல் புர்ஜா உட்பட ஆறு நேபாளம் நாட்டவர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் மரணமடைந்த துயரச் சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
இதனிடையே, காரகோரம் மலைத்தொடரில் உள்ள 8,047 மீற்றர் உயரமான சிகரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, உலகின் 12-வது மிக உயர்ந்த அந்தச் சிகரத்தில் மலையேறியவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பல்நாட்டினரை உள்ளடக்கிய அந்த மலையேற்றக் குழுவை புர்ஜா வழிநடத்தியுள்ளார். 'நிம்ஸ்' என்றும் அழைக்கப்படும் இவர், 2019-ஆம் ஆண்டில் உலகின் 8,000 மீற்றருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைச்சிகரங்கள் அனைத்தையும் வெறும் 189 நாட்களில் ஏறி முடித்து, முந்தைய சாதனையை ஏழு ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளியில் முறியடித்ததன் மூலம் பெரும் புகழ்பெற்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |