பாகிஸ்தானில் பனிச்சரிவு - பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்
பாகிஸ்தானின் பிராட் பீக்கில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மலையேற்றத்தின் போது பனிச்சரிவால் மாயமாகியுள்ளனர்.
பிராட் பீக் பனிச்சரிவு
பாகிஸ்தானின் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் 8,051 மீட்டர் உயரமுள்ள பிராட் பீக்(Broad Peak) உலகின் மிக உயரமான மலை சிகரங்களில் ஒன்றாக உள்ளது.

இது உலகின் 12வது பெரிய சிகரமாகவும், அந்த மலைத்தொடரில் 3வது உயரமான சிகரமாகவும் உள்ளது.
இங்கு, நேபாளத்தில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா(Nirmal Purja) உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் அடங்கிய குழு மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த குழுவில், 5 நேபாள மலையேறுபவர்கள், ஹன்சாவைச் சேர்ந்த பாகிஸ்தானிய மலையேறுபவரான சோஹைல் சகி, ஒரு ஓமன் மலையேறுபவர், ஒரு அமெரிக்க மலையேறுபவர், ஒரு சீன மலையேறுபவரானவாங் மற்றும் மற்றொரு வெளிநாட்டு மலையேறுபவர் ஆகியோர் இருந்தனர்.
நேற்று, பிராட் பீக்கில் ஏற்பட்ட பனிச்சரிவிற்கு பின்னர் இந்த குழுவினர் மாயமாகியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த உடன், அந்த பகுதியில் மற்ற மலைகளில் உள்ள மளியேறுபவர்கள் மற்றும் 2 ராணுவ மீட்பு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணிக்காக அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில், 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், 6 பேரை தேடி வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த நிர்மல் பூர்ஜா?
நேபாளத்தில் பிறந்த நிர்மல் பூர்ஜா, 2003 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவத்தில் சேர்ந்து, 2009 ல் ராயல் மரைன் ஆனார்.
எவரெஸ்ட் , லோட்சே மற்றும் மகாளு சிகரங்களை 48 மணி நேரத்திற்குள் அடைந்த முதல் நபர் புர்ஜா ஆவார்.
நிர்மல் புர்ஜா, 2019 ஆம் ஆண்டில் 189 நாட்களில், உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைகள் அனைத்திலும் ஏறியதற்காக அறியப்படுகிறார். இந்தச் சாதனை, “14 Peaks: Nothing is Impossible” என்ற நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்றது.
மேலும், உலகின் மிக உயரமான பல சிகரங்களை மிகக் குறைந்த நேரத்தில் அடைந்ததற்காக அவர் 6 கின்னஸ் உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |