ராமர் நிற புடவையில் பட்ஜெட் தாக்கலுக்கு வந்த நிர்மலா சீதாராமன்.., இது தான் காரணமா?
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமர் நிற புடவை அணிந்து வந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
பட்ஜெட் தாக்கல்
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது ஆட்சியில் நடைபெறும் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் ஆகும்.
இந்நிலையில், இன்று இந்த பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இதன்மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய அமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
நிர்மலா சீதாராமன், 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், 6 -வதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார்.
ராமர் நிற புடவை
இந்நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ராமர் நிற புடவையில் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். பொதுவாக கருநீலத்தை அல்லது மயிலின் கழுத்தில் இருக்கும் நிறத்தை ராமர் நிறம் என்று கூறுவார்கள். அதன்படி பார்த்தால் ராமருக்கே உரிய நிறமாக சொல்லப்படும் நிறத்தில் புடவை அணிந்து வந்திருக்கிறார்.
கடந்த மாதம் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று சில கருத்துக்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான், நிர்மலா சீதாராமனின் புடவை நிறம் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் அணிந்துள்ள புடவை தங்க நிறத்தில் இலைகள் பதிக்கப்பட்டும், embroidery டிசைனிலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |