சும்மா இருக்கோம்னு சமையல் YouTube Channel தொடங்கிய பெண்.., இன்று சொத்து மட்டுமே ரூ.29 கோடி
வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் சமையலுக்காக YouTube Channel தொடங்கிய பெண்ணின் சொத்துமதிப்பு ரூ.29 கோடி உயர்ந்துள்ளது.
தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பலரும் சம்பாதித்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக YouTube -ல் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருவாயை பெறுகின்றனர். அப்படிபட்ட ஒருவரை தான் பார்க்க போகிறோம்.
யார் இந்த பெண்?
1959 -ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நிஷா மதுலிகா (Nisha Madhulika). இவர், தொழில்முனைவோரான எம்.எஸ்.குப்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். Nisha Madhulika முதலில் ஆசிரியையாக பணிபுரிந்து கணவரது தொழிலில் நிதியை கையாண்டார்.
பின்னர், டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு குடும்பத்துடன் மாறியதால் அலுவலகம் சென்று பணிபுரிய சிரமமாக இருந்தது. இதனால், அவர் வீட்டிலேயே இருந்தார். இவருடைய இரு மகன்களும் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். கணவரும் அலுவலகம் செல்வதால் Nisha Madhulika வீட்டில் 6 மணி நேரம் சும்மாவே இருந்துள்ளார்.
YouTube Channel
இதனால் Nisha Madhulika ஏதாவது ஒரு நல்ல வேலையை செய்ய வேண்டும் என்று 2007 -ம் ஆண்டு வலைதளத்தில் சமையல் குறிப்புகளை எழுத தொடங்கினார். இதற்கு அவரது மகன்களும் கணவரும் உதவி புரிந்தனர்.அப்போது அவருடைய வயது 54.
பின்னர், இணையவாசிகள் வீடியோக்களை பதிவிடுமாறு கேட்டதால் 2011 -ம் ஆண்டு YouTube Channel ஒன்றை தொடங்கினார். இது தான் அவருடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது இதுவரை 2,200 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால், Nisha Madhulika பிரபலமான சமையல்காரர்களில் ஒருவராக அறியப்பட்டார். எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களை வைத்து சமையல் செய்வதால் மிகவும் புகழ்பெற்ற சமையல்காரராக மாறினார்.
மேலும், YouTube -ல் சிறந்த சமையல்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், 2016 -ம் ஆண்டு வோடாபோனின் உமன் ஆஃப் ப்யூர் ஒன்டர் காபி டேபிள் புத்தகத்தில் Nisha Madhulika இடம் பிடித்தார்.
தற்போது, 64 வயதான இவரது சேனலில் 1.4 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். மாதம்தோறும் இதன்மூலம் மட்டுமே லட்சக்கணக்கில் வருவாயை பெறுகிறார். இந்நிலையில், Nisha Madhulika -வின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.29 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |