வங்காளதேச அணியை அடித்து நொறுக்கிய இலங்கை! விளாசிய நிசங்கா, கமில்
ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
ஷமிம் 42 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேசம் 5 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது.
ஷமிம் ஹொசைன் (Shamim Hossain) 34 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார். ஜாகர் அலி 34 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கமில் மிஷாரா (Kamil Mishara) அதிரடியில் மிரட்டினார்.
நிசங்கா அரைசதம்
மறுமுனையில் அடித்து நொறுக்கிய பதும் நிசங்கா (Pathum Nissanka)அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.
குசால் பெரேரா (9), தசுன் ஷானகா (1) சொதப்ப கமில் மிஷாரா ஆட்டத்தை 15வது ஓவரிலேயே முடித்து வைத்தார்.
இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் விளாசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |