கொரோனாவை வென்ற நிதா அம்பானி! பட்டமளிப்பு விழாவில் உற்சாக பேச்சு
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி கொரோனா தொற்றில் இருந்து சமீபத்தில் குணமடைந்ததாக அறிவித்தார்.
கொரோனாவில் இருந்து வெளிவந்த நிதா அம்பானி
மும்பையில் உள்ள தீருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் (DAIS) பட்டமளிப்பு விழாவில் நிதா அம்பானி சமீபத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வை தவற விட மாட்டேன் என்றும் கூறினார்.
அதில் “ இன்று காலைத்தான் நான் கொரோனாவிலிருந்து குணமடைந்தேன். இது எனக்கு முதல் முறை. இந்த பட்டமளிப்பு விழாவை எதற்காகவும் நான் தவற விட்டிருக்க மாட்டேன்," என்று மே 19 ஆம் தேதி பள்ளியின் 2024 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவின் முடிவில் அம்பானி பேசினார்.
நிதா அம்பானி தீருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் தலைவர் ஆவார்.
எனது குழந்தைகள் பட்டம் பெற்று தீருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலின் கதவுகளை விட்டு வெளியே வருவதை பார்க்க இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது," என்று அவர் கூறினார்.
ஆனந்த அம்பானியின் திருமண விழா
அம்பானிகள் இந்த வாரம் ஐரோப்பாவில் ஒரு சொகுசு கப்பலில் தங்கள் இளைய மகன் ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கான ஒரு பிரமாண்டமான நான்கு நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை நடத்துகின்றனர்.
இந்த ஜோடி ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழா கொண்டாட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் ஐகான் எம்.எஸ். தோனி மற்றும் பிற VIP கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |