சோகத்தில் அமர்ந்திருந்த மகன்..கண்டுகொள்ளாமல் நீதா அம்பானி செய்த செயல் - வைரலான புகைப்படம்
மும்பை அணியின் மோசமான பந்துவீச்சின்போது மகன் சோகத்தில் இருக்க, நீதா அம்பானி அதனை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்துக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்துநொறுக்கிய சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி எனும் சாதனையை படைத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு சின்னாபின்னமானதால் ரசிகர்கள் மட்டுமின்றி, அணியின் நிறுவனர் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானியும் சோகத்தில் அமர்ந்திருந்தார்.
அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நீதா அம்பானி, போட்டியை பற்றி கவலைப்படாதவாறு செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
தாய், மகன் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக விளையாடியபோது கொடுத்த ரியாக்சன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |