நித்யானந்தா உயிரிழப்பா? சகோதரி மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்
நித்யானந்தா
இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியாரான நித்யானந்தா திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.
இதன் பின்னர் இவர் சில சர்ச்சைகளில் சிக்கியதோடு, இவர் மீது சில வழக்கும் பாய்ந்தது.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் இவர், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அந்நாட்டிற்கு என தனி கொடி, ரூபாய் நாணயங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை அறிவித்தார்.
முன்னதாகவே நித்யானந்தா சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் சில நாட்களில் மீண்டும் வீடியோ மூலம் பக்தர்கள் முன்பு தோன்றி ஆசி வழங்கினார்.
இந்நிலையில், தற்போது நித்யானந்தா இந்து மதத்தை காக்க உயிர்த்தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரி மகன் சொன்ன தகவல்
இதில் பேசிய அவர், "20 வருடங்களுக்கு மேலாக ஆன்மிக பணியில் நித்யானந்நா ஈடுபட்டு வரும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புதல், தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியது.
ஆனால், இதற்கு எதற்குமே தயங்காமல் நீதி என்னவோ, தர்மம் என்னவோ, நியாயம் என்னோவோ அதற்காகத்தான் நிற்பேன் என கூறினார்.
எது வந்தாலும் பார்த்துக்கலாம் என நின்று சுவாமிஜி தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இன்று இந்து தர்மம் என்பது சுவாமி ஜி போட்ட தியாகம்தான் காரணம்" என கூறியுள்ளார்.
ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |