வெளிநாடொன்றில் பூர்வகுடி மக்களின் நிலத்தை கையகப்படுத்தும் நித்யானந்தா: கசிந்த பின்னணி
லத்தீன் அமெரிக்காவில் தனக்கான ஒரு அரசாங்கத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள நித்யானந்தா, பொலிவியாவில் நிலம் வாங்க லட்சக்கணக்கான டொலர்களை செலவிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நித்யானந்தா
உண்மையில் நித்யானந்தாவின் ஆதரவாளர்களே, இந்த நாடுகளில் நிலங்களை வாங்க லட்சக்கணக்கான டொலர்களை செலவிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பொலிவிய அமேசானில் உள்ள பௌர் பூர்வகுடி மக்களின் பிரதிநிதி ஒருவர்,
அவர்களுக்கு சொந்தமான மழைக்காடுகளில் 60,000 ஹெக்டேர் பகுதியை ஆண்டுக்கு 108,000 டொலர் தொகைக்கு குத்தகைக்கு விடும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
கயூபாபா பூர்வகுடி மக்களும் தங்களின் 31,000 ஹெக்டேர் நிலத்தை ஆண்டுக்கு 55,800 டொலருக்கு நித்யானந்தா ஆதரவாளர்களுக்கு குத்தகைக்கு அளித்துள்ளனர். குத்தகைக்கு எடுக்கப்பட்ட இந்த நிலங்களின் பலனை அனுபவிப்பவர் கைலாசா ஐக்கிய நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ல் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவான நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட கற்பனை தேசம் கைலாசா. ஈக்வடார் மற்றும் பராகுவே நாடுகளில் நிலம் வாங்கும் முயற்சிகள் தோல்வியில் முடிய, தற்போது பொலிவியாவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து வருகிறார்.
2024 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நான்கு பூர்வகுடி குழுக்களிடம் இருந்து நிலங்களை 1,000 ஆண்டுகளுக்கு நித்யானந்தா தரப்பு குத்தகைக்கு எடுத்துள்ளது. மிக இரகசியமாக நடந்த இந்த நகர்வுகள் அனைத்தும் பொலிவியா நாளேடு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டத்தில் இடமில்லை
ஆனால் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கைலாசாவின் கீழில் உள்ள இந்த நிலங்கள் தொடர்பில் எந்த சட்ட போராட்டங்களையும் இங்குள்ள பூர்வகுடி மக்களே எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் முறைகேடானது மற்றும் பல பொலிவிய சட்டங்களை மீறியுள்ளது என்றார்.
பூர்வகுடி நிலங்களை அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட சட்டத்தில் இடமில்லை என்றே அந்த சட்டத்தரணி வாதிடுகிறார். இந்த விவகாரத்தில் இதுவரை பொலிவிய அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் கைலாசா பிரதிநிதிகள் குழு ஒன்று பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் என்பவரை சந்தித்துள்ளது. இதனிடையே, மார்ச் 24ம் திகதி கைலாசா தொடர்புடைய 20 வெளிநாட்டவர்களை பொலிவிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.
இந்த 20 பேர்களில் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சீன நாட்டவர்களும் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |