1,68,491 பேர் சாலை விபத்துகளில் மரணம்! தமிழகத்தில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை - அமைச்சர் கூறிய விபரம்
இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் பலியானதாக, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சராக நிதின் கட்கரி (Nitin Gadkari) உள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் சாலை விபத்துகள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அதிவேகமாக கார் ஓட்டுதல், செல்போன் பயன்படுத்துதல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல், தவறான பாதையில் செல்வது போன்ற பல காரணங்களால் விபத்து ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டில் மட்டும் 1,68,491 பேரும், 2021ஆம் ஆண்டில் 1,53,972 பேரும், 2020ஆம் ஆண்டில் 1,38,383 பேரும் பலியானதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உத்தர பிரதேசத்தில் 22,595 சாலை விபத்துகளும், தமிழகத்தில் 17,884, மராட்டியத்தில் 15,224, மத்திய பிரதேசத்தில் 13,427, கர்நாடகாவில் 11,702, டெல்லியில் 1,461 சாலை விபத்துகளும் நடந்துள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |