கோஹ்லியின் ஷூவை அணிந்து சதமடித்தேன்! நெகிழ்ச்சியுடன் கூறிய வீரர்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி, மூத்த வீரர் விராட் கோஹ்லியின் ஷூவை அணிந்து விளையாடியது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டி
ஐபிஎல் 2025 தொடரில் ஆல்ரவுண்டர் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 303 ஓட்டங்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நிதிஷ் ரெட்டி 5 டெஸ்டில் 298 ஓட்டங்களும், 4 டி20யில் 90 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
அவர் ஷூவை அணிந்து சதமடித்தேன்
இந்த நிலையில் விராட் கோஹ்லி குறித்து ஒரு விடயத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
"ஒருமுறை விராட் கோஹ்லி, சர்ஃபராஸ் கானிடம் உன் ஷூ சைஸ் என்ன? என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னைப் பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து விளையாடி போட்டியில் சதமடித்தேன்!" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |