கடைசி ஓவரில் சொதப்பியவரை சூப்பர் ஓவரிலும் களமிறக்கியது ஏன்? நிதிஷ் ராணா அளித்த பதில்
சூப்பர் ஓவரில் ஹெட்மையரை களமிறங்கியது சரியான முடிவுதான் என ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதிஷ் ராணா தெரிவித்தார்.
சொதப்பிய ஹெட்மையர்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் 9 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்தார்.
20வது ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, ஹெட்மையர் மற்றும் ஜூரேல் கூட்டணி ஒரு பவுண்டரி கூட விரட்ட முடியாமல் 1, 2 ஓட்டங்களை ஓடியே எடுத்தது. 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி டிரா ஆனது.
சிக்ஸர்களை பறக்கவிடும் அதிரடி வீரரான ஹெட்மையர் கடைசி ஓவரை சரியாக பயன்படுத்தவில்லை. ஆனாலும், பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் அவரே களமிறக்கப்பட்டார்.
இம்முறையும் அவர் ஒரு பவுண்டரி மட்டுமே விரட்டினார். இதனால் ராஜஸ்தான் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, டெல்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.
நிதிஷ் ராணா
இதனைத் தொடர்ந்து, ஹெட்மையரை மீண்டும் களமிறங்கியது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜஸ்தான் வீரர் நிதிஷ் ராணா (Nitish Rana), "சூப்பர் ஓவரில் ஹெட்மையர் இரண்டு சிக்ஸர்களை விளாசி இருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. நாங்கள் எடுத்த முடிவு சரியானது. ஹெட்மையர் எங்கள் ஃபினிஷர். அது அனைவருக்கும் தெரியும்" என்றார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 (37) ஓட்டங்களும், நிதிஷ் ராணா 51 (28) ஓட்டங்களும் விளாசினார். ஆனால் ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் இவர்களை விடுத்தது பராக், ஹெட்மையரை களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |