448 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்: ஸ்பைடர்மேன் போல் பறந்து கேட்ச் செய்த வீரர்..மிரண்ட எதிரணி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி 448 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
ஜடேஜா 104 ஓட்டங்கள்
அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் (KL Rahul), துருவ் ஜூரேல் (Dhruv Jurel) ஆகியோர் சதம் விளாசினர்.
⚡️WHAT A CATCH!
— Cricbuzz (@cricbuzz) October 4, 2025
𝐍𝐢𝐭𝐢𝐬𝐡 𝐑𝐞𝐝𝐝𝐲 🫡🫡 #CricketTwitter #INDvsWIpic.twitter.com/4cuaA6sUJi
அதேபோல் ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 104 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 448 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
ரஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், காரி பியெர்ரே, சீல்ஸ் மற்றும் வாரிக்கன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
நிதிஷ் குமார் ரெட்டி பறந்து கேட்ச்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு நிதிஷ் குமார் ரெட்டி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.
சிராஜ் வீசிய ஓவரில் தகெனரின் சந்தர்பால் அடித்த ஷாட்டை நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) ஸ்பைடர்மேன் போல் பறந்து கேட்ச் செய்து மிரட்டினார்.
அவரது டைவ்வை பார்த்து ஒட்டுமொத்த மைதானமே அதிர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |