ராஜீவ்காந்தி கொலை வழக்கு! தமிழர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டாலும்... இது நடக்காது என சீமான் உறுதி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டாலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும், வகையில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமானும், பரப்புரையில் இறங்கியுள்ளார்.
இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாகவே போட்டியிடும், யாருடனும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டாலும், திராவிட கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், நான் ஓட்டுக்கானவன் அல்ல. நான் நாட்டுக்கானவன்.
மக்களுக்கானவன். நாங்கள் வீதிக்கு வருவது வாக்கினை கேட்டு அல்ல. எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேட்டு. தமிழ்நாட்டில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான். இதுகட்சி மட்டுமே 234 தொகுதியில் போட்டியிடக்கூடிய கட்சி, மற்ற கட்சிகள் அனைத்தும் அப்படி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

