No Boil No Oil: அடுப்பே இல்லாமல் சுவையான Vegetable Rice: ஈசியா செய்யலாம்
தற்போது No Boil No Oil என்ற உணவு வகைகள் இணையத்தில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இது மிகவும் சத்தாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருப்பதால் பலரும் வீட்டில் செய்து பார்க்கின்றார்கள்.
அந்தவகையில், அடுப்பே இல்லாமல் சுவையான Vegetable Rice எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கெட்டி அவல்- 2 கப்
- இந்துப்பு- 2 ஸ்பூன்
- கேரட்- 1
- உருளைக்கிழங்கு- 1
- வெங்காயம்- 1
- முந்திரி- 10
- பச்சை பட்டாணி- 4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் அவல் சேர்த்து 2 முறை நன்கு கழுவி 10 நிமிடம் ஊறவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து 1 ஸ்பூன் இந்துப்பு சேர்த்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதேபோல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து 1 ஸ்பூன் இந்துப்பு சேர்த்து நறுக்கிய பச்சை பட்டாணி சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல், நறுக்கிய கேரட், ஊறிய உருளைக்கிழங்கு, பச்சைபட்டாணி, நறுக்கிய வெங்காயம், முந்திரி, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் கொத்தமல்லி இலை தூவி கிளறினால் சுவையான Vegetable Rice தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |