சுவையான ஐயர் வீட்டு மிளகு பொங்கல்: எப்படி செய்வது?
காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல்.
அதிலும் ஐய்யர் வீடுகளில் செய்யப்படும் வெண் பொங்கலின் மணமும், சுவையும் தனித்துவமாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான ஐயர் வீட்டு மிளகு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- ¼ kg
- பாசி பருப்பு- ¼ kg
- ரவை- ¼ kg
- இஞ்சி- 1 துண்டு
- உப்பு- தேவையான அளவு
- பெருங்காயம்- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- 5 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- மிளகு- 10g
- சீரகம்- 20g
- நெய்- 3 ஸ்பூன்
- முந்திரி- 10
செய்முறை
முதலில் பச்சரிசியை கழுவி நன்கு குலைந்து வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் பாசி பருப்பை நன்கு கழுவி கொதிக்கின்ற நீரில் தனியாக நன்கு குலைந்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வடித்த சாதத்துடன் வேகவைத்த பருப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
பின் இதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து கிளறவும்.
இதனைத்தொடர்ந்து இதில் ரவை தூவிக்கொண்டு நன்கு கிளறி கெட்டியாகி வந்ததும் மூடி போட்டு வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் மிளகு சேர்த்து பொரிந்து வந்ததும் சீரகம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
அடுத்து இதில் கருவேப்பிலை, முந்திரி சேர்த்து வருத்ததும் இதை பொங்கலில் சேர்த்து கிளறி மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் நெய் சேர்த்து கிளறினால் சுவையான ஐயர் வீட்டு மிளகு பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |