இந்தியா - சீன பிரச்சனையில் உலக நாடுகள் தலையீடு? விருப்பம் காட்டாத இந்திய அரசு
இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் உலக நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீன பிரச்சனை
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து குவாட் (Quad) என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பின் கூட்டம் நேற்று ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூட்டத்தின் நடுவில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், "கடந்த 2020 -ம் ஆண்டின் கொரோன காலத்தில் சீன நாட்டு ராணுவ வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் குவிந்தனர்.
அவர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்ததால் இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
அப்போது இருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. ஆனால், சீன நாட்டின் உடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது.
இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து சீனா நடந்து கொண்டால் சாத்தியமாகும். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசலால் உலக நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை இந்தியா விரும்பவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |