ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை... பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு

Donald Trump Iran
By Arbin Aug 03, 2026 11:55 AM GMT
Report

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் முடிவு செய்யவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

திங்களன்று ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகம் மறுப்பு

ஈரான் மீது நடத்தவிருந்த மிகப்பெரிய தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி ரத்து செய்ததைத் தொடர்ந்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை தொடங்க இருப்பதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டு வந்தது.

ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை... பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு | No Current Talks With Us

ஞாயிறன்று 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தாக்குதல் உருவாவதை நேரில் கண்டதால் அதன் தீவிரத்தை ஈரான் அறிந்திருந்தது.

இதனையடுத்தே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். முன்னதாக தமது ட்ரூத சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஒப்பந்தம் ஒன்று ஏற்கப்பட்டுவிட்ட நிலையில், காத்திருக்குமாறு ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் அவரிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையோ அல்லது அவ்வாறு செய்வதற்கான திட்டங்கள் ஏதேனும் இருப்பதையோ திங்களன்று ஈரானின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்

ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்

மேலும் ட்ரம்பின் பேச்சில் உண்மை இல்லை என்றும், ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறை குறித்து ஒரு புரிதலை எட்ட, ஓமனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரானின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான முந்தைய பேச்சுவார்த்தைகள் மத்தியஸ்தர்கள் மூலமே முன்னெடுக்கப்பட்டன. மேலும், பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவது நெருங்கிவிட்டதாக ட்ரம்ப் பலமுறை உறுதியளித்த போதிலும், பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ட்ரம்ப் சொல்வதில் உண்மை இல்லை... பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பு மறுப்பு | No Current Talks With Us

இதனிடையே, திங்களன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துக்கொள்வார்கள் அல்லது பேச்சுவார்த்தை எங்கே முன்னெடுக்கப்படுகிறது என்பது தொடர்பானத் தகவல் எதையும் ட்ரம்ப் வெளிப்படுத்தவில்லை.

ஈரான் மீது வார இறுதியில் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற அமெரிக்காவின் நட்பு வட்டாரம் தன்னிடம் வலியுறுத்தியதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US