ரணிலுக்கு எதிராக அலரி மாளிகை்கு முன் உதயமான ‘நோ டீல் கம’ போராட்டக்களம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பேரங்களுக்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ என்ற பெயரில் இலங்கையர்கள் போராட்டக்களம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மகிந்ர ராஜபக்ச ராஜினாமா செய்யக்கோரி அலரி மாளிகைக்கு முன் ‘மைனா கோ கம’ என போராட்டத்தளம் அமைக்கப்பட்டது.
மே 9ம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தததை அடுத்து ‘மைனா கோ கம’ போராட்டத்தளம் காலி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று அலரி மாளிகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடமை ஏற்றதை அடுத்து, அதே இடத்தில் புதிய போராட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
New protest site 'No-Deal-Gama' set up opposite Temple Trees
— Pulse Today (@pulse_today) May 13, 2022
? Temple Trees #PulseToday #lka #SriLanka #MainaGoGama #GotaGoGama #ProtestLK #PoliceCurfew #EmergencyLaw pic.twitter.com/KVLZMtLREi
அரசியில் பேரம் பேசி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்தள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ‘நோ டீல் கம’ பேரம் கூடாது என வலியுறுத்தும் வகையில் புதிய போராட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
8 அம்ச கோரிக்கைகள்... பிரதமர் ரணிலுக்கு ‘கோட்டா கோ கம’ போராட்டகாரர்கள் வலியுறுத்தல்