ஆண்டின் இறுதியில் முடங்கும் டெலிவரி சேவை - டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
டெலிவரி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில், டெலிவரி சேவை முடங்கும் அபாயம் உள்ளது.
டெலிவரி ஊழியர்கள்
மளிகை பொருட்கள் தொடங்கி உணவு, ஆடைகள் வரை அனைத்தையும் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து, வீட்டில் வாசலில் நின்று பெற்றுக்கொள்ளும் E-commerce வணிகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்த துறையில், GiG Workers என அழைக்கப்படும் 10 மில்லியனுக்கு அதிகமான டெலிவரி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை போன்ற பெரு நகரங்களில், பண்டிகை நாட்கள், மழை, வெயில் பாராது, நாளின் 24 மணி நேரமும் டெலிவரி ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், நீண்ட வேலை நேரம், சரியான ஊதியம் இல்லை, பணி பாதுகாப்பு இல்லை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக டெலிவரி ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
வேலை நிறுத்தம்
இந்நிலையில், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 31 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. எனவே "10 நிமிட டெலிவரி" மொடலை ரத்து செய்ய வேண்டும்.

சுகாதாரப் பாதுகாப்பு, விபத்துக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
சிறந்த ஊக்கத்தொகை, வெளிப்படையான மற்றும் நியாயமான ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும்.
நியாயமான வேலை நேரம் மற்றும் கட்டாய ஓய்வு நேரங்கள். உரிய விசாரணை மற்றும் விளக்கம் அளிக்காமல் ஊழியர்களின் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அமேசான், ஸ்விக்கி, ஸ்மோடோ, செப்டோ, பிளிங்க் இட், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தளங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
புத்தான்டு தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் பரிசு பொருட்கள் உள்ளிட்ட பலவும் ஆர்டர் செய்துள்ள நிலையில், வேலைநிறுத்தத்தால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |