யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாததால் காத்திருந்த மயக்கமடைந்த மாணவன்
யாழ்ப்பாணம் இளவாலை வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாத காரணத்தினால் மயக்கடைந்த மாணவர் ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவன் இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 26.03.2026 அன்று மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அங்கு மருத்துவர் இல்லாததால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்தார் நிலையில் மருத்துவர் 2 மணி பிறகே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கோரிக்கை வைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர், மாணவருக்கு ஏதேனும் நடந்துவிட்டால் தன் மீது பொறுப்பு வந்துவிடும் எனவே செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவையாவது தயார் செய்து தருமாறு கேட்ட நிலையில், அதுவும் தனக்கு தெரியாது என்றும், வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராது என கூறியுள்ளார்.
பின்னர் வேறு வழி இல்லாமல் மயக்கமடைந்த மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மருத்துவம் பார்க்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |