உலகின் செல்வாக்குமிக்க 100 பேர்: ஒரு இந்தியர் கூட இல்லை..ட்ரம்ப், மஸ்க் ஆதிக்கம்
டைம் பத்திரிகையின் உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
உலகின் செல்வாக்கு மிக்கவர்கள்
சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் 100 பிரபலங்கள் குறித்த பட்டியலை, ஆங்கில பத்திரிகையான டைம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும்.
இதில் அரசியல், பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இடம்பெறுவார்கள்.
அந்த வகையில் 2025யில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்குக்கான பட்டியலில் இந்தியர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
ஒரு இந்தியரும் இல்லை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரபல நடிகை டெமி மூர் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க ராப் பாடகர் ஸ்னூப் டாக், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் தற்போதைய வணிக பிரபலமுமான செரீனா வில்லியம்ஸ், பிரபல பாடகர் எட் ஷீரன் ஆகியோரும் இதில் உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |