யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்த இன்டர்நெட் தேவையில்லை! இப்படி செய்தாலே போதும்
யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும் போது இன்டர்நெட் துண்டித்தால் இனி கவலை வேண்டாம். இந்த முறையை பின்பற்றினாலே போதும்.
யுபிஐ பரிவர்த்தனை
தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். முக்கியமாக யுபிஐ வந்தபிறகு பணம் அனுப்புவதற்கு இன்னும் எளிதாகிவிட்டது.
கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறை என்றாலும் நமக்கு இன்டர்நெட் முக்கியமான ஒன்று. சில நேரங்களில் நாம் கடைகளில் பொருள்களை வாங்கிய பின் பணத்தை அனுப்ப முயலும் போது இன்டர்நெட் கிடைக்காமல் அவதிப்படுவோம். அவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஃப்லைலின் அனுப்பலாம்
நாம் பணத்தை அனுப்ப *99# சேவை மூலம் ஆஃப்லைலின் அனுப்பிக் கொள்ளலாம். இந்த சேவைக்கு Unstructured Supplementary Service Data என்று பொருள். இந்த சேவையை நாம் இணையம் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையை நாடு முழுவதும் உள்ள 83 முன்னணி வங்கிகள் மற்றும் 4 டெலிகாம் நிறுவனங்களில் பெறலாம். மேலும், இந்த சேவையை பயன்படுத்தி ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 பல்வேறு மொழிகளில் பணம் அனுப்ப முடியும்.
எப்படி அனுப்ப வேண்டும்?
நீங்கள் இணையம் இல்லாமல் பணத்தை அனுப்புவதற்கு முதலில் செட் செய்ய வேண்டும். அதாவது, உங்களது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் என்னிலிருந்து *99# என்று டயல் செய்ய வேண்டும். வங்கிக் கணக்கை லிங்க் செய்யாத மொபைல் எண்ணில் இருந்து இந்த சேவையை பயன்படுத்த முடியாது.
பின்னர், உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து வங்கியின் பெயரை டைப் செய்ய வேண்டும். அப்போது, வங்கிக்கணக்குகள் குறித்த விவரங்கள் உங்களுக்கு காட்டப்படும்.
அதில், உங்களுடைய வங்கி கணக்கைத் தேர்வு செய்து, உங்களது டெபிட் கார்டின் கடைசி 6 எண்கள், காலாவதி தேதி ஆகியவற்றை டைப் செய்து முடித்தாலே போதுமானது. இப்போது நீங்கள் யுபிஐ (UPI) மூலம் ஆஃப்லைனில் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.
அடுத்து, பணத்தை எப்படி அனுப்புவது பற்றி பார்க்கலாம். அதற்கு முதலில் *99# என்று டயல் செய்து பணத்தை அனுப்ப 1 ஐ டைப் செய்ய வேண்டும்.
பின்னர், தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து அனுப்ப வேண்டிய நபரின் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்ய வேண்டும். கடைசியாக நீங்கள் யுபிஐ பின் எண்ணை போட வேண்டும்.
இந்த *99# சேவைக்கு நீங்கள் ரூ. 0.50 செலுத்த வேண்டும். இந்த சேவையில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை பணத்தை அனுப்ப முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |