புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி
புலம்பெயர்ந்தோரை ஒடுக்கியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன சில நாடுகள்.
அவ்வகையில், நாடொன்று எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளால், வேறு வழியில்லாமல் அந்நாட்டை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் என்னும் நிலை புலம்பெயர்ந்தோருக்கு உருவாகியுள்ளது.
ஒரு திடுக் செய்தி
2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் ஈரான், பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

அப்படி ஈரானில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கன் அகதிகளுக்கு தொல்லை கொடுத்து அவர்களை வெளியேற்ற ஈரான் கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுக்கக்கூடாது என ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஈரானில் வாழும் புலம்பெயர்ந்தோர் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளுக்கு பள்ளியில் படிக்க இடம் கொடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளதாம்.
மேலும், புலம்பெயர்ந்தோரின் வங்கி அட்டைகள் மற்றும் சிம் கார்டுகளும் செயலிழக்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், இதுவரை ஈரானிலிருந்து 1.5 மில்லியன் ஆப்கன் புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |