தொடர்ந்து 51 நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று ஏற்படாத அவுஸ்திரேலிய மாகாண
அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய மாகாணமான New South Walesஇல் தொடர்ந்து 51 நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்ற விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்டோரியா மாகாணத்தில் 11 நட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மேற்கு அவுஸ்திரேலியாவில் ஏழு பேருக்கு மட்டுமே கொரோனா உள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியா, டாஸ்மேனியா, வடக்கு மாகாணம் மற்றும் அவுஸ்திரேலிய தலைநகரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றே இல்லை எனும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.