சுரங்க விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள்.., அமைச்சர் கவலை
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்கள் 8 பேரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கவலை
இந்திய மாநிலமான தெலங்கானா, நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயின் கட்டுமான வேலை நடந்து வந்தது.
இந்த பணி நடந்த சுரங்கப் பாதையின் கூரை கடந்த சனிக்கிழமை அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதில், சுரங்கம் இருந்த 14 கிலோமீற்றர்களில் 3 கிமீ வரை சுரங்கம் இடிந்துள்ளது. இதற்கான மீட்பு பணிகளை மீட்பு குழுவினருடன் இணைந்து இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது.
இதில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் பணிக்குழு இணைந்துள்ளது.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை தெலங்கானா அமைச்சர் கிருஷ்ண ராவ் பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த விபத்து குறித்து உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. சுரங்கம் இடிந்த 50 மீட்டர் பகுதி வரை சென்று புகைப்படம் எடுத்தோம். ஆனால், சுரங்கத்தின் முடிவு தெரியவே இல்லை.
சுரங்கப்பாதையின் 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடிக்கு 25 அடி வரை சேறு நிறைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களின் பெயர்களை சொல்லி சத்தமாக அழைத்தோம்.
எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை" என்று கவலை தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |