ஐரோப்பாவில் இஸ்லாமிற்கு இடமில்லை: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேச்சு- வைரலாகும் பழைய வீடியோ
இஸ்லாமிற்கு ஐரோப்பாவில் இடம் இல்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியின் சகோதரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ரோம் நகரில் நடைபெற்ற அரசியல் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தினார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
இந்த மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் கலந்து கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
Italian PM Giorgia Meloni: "I believe... there is a problem of compatibility between Islamic culture and the values and rights of our civilization... Will not allow Sharia law to be implemented in italy.... values of our civilization are different! pic.twitter.com/kDYslfQ58W
— Megh Updates 🚨™ (@MeghUpdates) December 17, 2023
முதல் சர்வதேச போட்டியிலேயே அரைசதம் அடித்த தமிழக வீரர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இஸ்லாமிற்கு இடமில்லை
இந்நிலையில் ஜார்ஜியா மெலோனி பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ஐரோப்பாவில் இஸ்லாமிற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாம் கலாச்சாரத்திற்கும் ஐரோப்பாவின் கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கும் இடையே பொருந்தக்கூடிய பிரச்சினைகள் இருப்பதாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கலாசார மையத்திற்கு ஷரியா சட்டம் அமலில் உள்ள சவுதி அரேபியா நிதி அளித்துள்ளது.
ஐரோப்பாவின் கலாச்சார செயல்முறைக்கும், இஸ்லாம் கலாச்சார செயல்முறைக்கும் இடையே நீண்ட தொலைவு இருப்பதாகவும் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Islam, Europe, Giorgia Meloni, Italy, Saudi Arabia, far-right party, Italian prime minister, Islamic culture, Europe culture