ரஷ்யாவில் இனி இது கிடையாது! அதிரடியாக அறிவித்த அதிகாரி
ரஷ்யாவின் இனி கார் பந்தயங்கள் கிடையாது என பார்முலா ஒன் அதிகாரி அறிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் கார் பந்தயம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
பார்முலா ஒன் கார் பந்தயத்தை ரஷ்யாவில் நடத்தும் திட்டம் இல்லை என பார்முலா ஒன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறவிருந்தது. ஆனால், உக்ரைன் மீதான போரால் அது ரத்து செய்யப்பட்டது.
PC: BRYN LENNONGETTY IMAGES
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பார்முலா ஒன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டெபனோ டொமினிகாலி, 'இந்த விடயத்தில் நான் நிச்சயமாக உறுதியளிக்க முடியும், நங்கள் இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். ரஷ்யாவில் இனி பந்தயங்கள் இருக்காது' என தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையின்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகத்து 22ஆம் திகதி வரை, 5500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 8000 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.