உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை... இன்னொரு ஐரோப்பிய நாடு திட்டவட்டம்
உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் போலந்துக்கு இல்லை என்று பிரதமர் டொனால்ட் தஸ்க் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் களமிறங்கக் கூடும்
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால் மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் போலந்து பிரதமர் இதை தெரிவித்துள்ளார்.
வார்சாவுக்குச் சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் நடந்த ஊடக சந்திப்பின் போதே பிரதமர் தஸ்க் இதை தெரிவித்துள்ளார்.
ஆனால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டால் ஐரோப்பிய துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்பும் யோசனை அவர்களின் திட்டத்தில் இருக்கும் என்று முக்கிய அதிகாரிகள் தரப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமேதும் போலந்துக்கு இல்லை என்பதை பிரதமர் தஸ்க் விளக்கியுள்ளார். இதனிடையே, ஜனாதிபதி மேக்ரான் தெரிவிக்கையில், அமைதிக்காக என்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
நிதி மற்றும் இராணுவ ஆதரவு
மட்டுமின்றி, ஐரோப்பா பாதுகாப்பாக இருக்க, ஒட்டுமொத்த கண்டத்தின் மக்களும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க ஐரோப்பா தயாராக இருப்பதாக,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்பிடம் தெரியப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்தின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களும் வியாழன் அன்று வார்சாவிலும் பெர்லினிலும் சந்திக்க உள்ளனர்.
போலந்து மற்றும் பெர்லினில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் உடனடியாக உக்ரைனுக்கான நிதி மற்றும் இராணுவ ஆதரவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆராயப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |