மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் இனி வரி கட்ட தேவையில்லை.., பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர், தனது 8-வது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் வருமான வரி அடுக்குகளை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், பிரிவு 87A இன் கீழ் வழங்கப்படும் வரி தள்ளுபடியையும் உயர்த்தியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்கள், எந்த வரியையும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை.
அவர் பேசுகையில், "நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரத்திற்கு தங்களது உழைப்பை கொடுக்கின்றனர். அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், வரி சுமையை குறைத்துள்ளோம். 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
கடந்த 2023 -ம் ஆண்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |