பூஸ்டர் தடுப்பூசி போட்டும் எந்த ஒரு பயனும் இல்லை! வேதனையுடன் சொன்ன பிரதமர்
இஸ்ரேலில் 60 சதவீதம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட்டும் எந்த பயனும் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பரவல் உலகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால், இதன் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால், இந்த ஒமைக்ரானில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தடுப்பூசி தான் தீர்வு என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் படி இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மூன்றாவது தடுப்பூசி அதாவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி கூறப்படுகிறது.
அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் இதுவரை 42 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த எந்த ஒரு பயனும் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னெட் கூறியுள்ளார்.
ஜெருசலேம் நகரில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்ததார்.
அப்போது, இஸ்ரேலில் மொத்தம் உள்ள 93 லட்சம் மக்கள் தொகையில், 42 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
அதாவது 60 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனாலும், கொரோனா புயல் விடுவதாக இல்லை.
கடந்த இரு வாரங்களில் 700 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 4 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவித்தார்.