நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்
Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.
நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.

ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர் வழங்கப்பட உள்ளது.
நோர்வே பணமான 12 மில்லியன் குரோனர் என்பது, 1.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது, 42,22,53,628.20 ரூபாய்.
நோபல் பரிசுகள் வழங்குவது துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இந்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளையின் இயக்குநரான Hanna Stjarne தெரிவித்துள்ளார்.
முதல் நோபல் பரிசு, 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை 150,782 குரோனர் ஆகும்.