இறந்த இந்திய பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 1.13 லட்சம் கோடி - என்ன நடந்தது?
இறந்த இந்திய பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 1.13 லட்சம் கோடி வரவு வைக்கபட்டுள்ளது.
வங்கி கணக்கில் ரூ. 1.13 லட்சம் கோடி
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான தீபக் என்பவரின் தாய் காயத்ரி தேவி, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உயிரிந்துள்ளார்.
காயத்ரி தேவிக்கு கோடாக் மஹேந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்துள்ளது. அந்த கணக்கை தற்போது அவரது மகன் தீபக் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி அந்த வங்கி கணக்கிற்கு 1.13 லட்சம் கோடி ரூபாய்(₹1,10,01,35,60,00,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299) வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தீபக், தனது நண்பர்களிடம் காட்டி, எத்தனை பூஜ்ஜியம் உள்ளது என என்னுமாறு கூறியுள்ளார்.
வருமான வரித்துறை விசாரணை
மேலும், மறுநாள் காலையில் வங்கி கிளைக்கு சென்று, இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இந்த பெரும் தொகையை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அந்த கணக்கை அணுகுவதை முடக்கியுள்ளனர்.
नोएडा में 20 साल के दीपक के कोटक महिंद्रा बैंक खाते में 36 डिजिट की धनराशि आई है।
— Sachin Gupta (@SachinGuptaUP) August 4, 2025
ये रकम 1 अरब 13 लाख 56 हजार करोड़ रुपए बैठती है।
मेरा गणित थोड़ा कमजोर है। बाकी आप लोग गुणा-भाग कर सकते हैं।
फिलहाल इनकम टैक्स विभाग जांच कर रहा है। बैंक खाता फ्रीज कर दिया गया है। pic.twitter.com/cLnZdMKozD
இது ஒரு மென்பொருள் பிழை அல்லது வங்கி பரிவர்த்தனையில் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வருமான வரித்துறை இது குறித்து விசாரித்து வருகிறது.
வங்கிக்கணக்கில் பெரும் தொகை வந்துள்ளதை அறிந்த தீபக்கின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரை செல்போனில் அழைக்க தொடங்கியுள்ளனர். அழைப்பை கையாள முடியாமல் அவர் செல்போனை அணைத்து வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |