மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்யும் இளவரசருக்கு வாகனம் ஓட்ட தடை விதிப்பு!
ராணியின் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வதற்கு இளவரசர் ஏர்ல் மார்ஷல் பொறுப்பேற்றார்.
இளவரசர் ஏர்ல் மார்ஷலுக்கு இப்போது ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்த இளவரசரான Edward Fitzalan-Howard, தனது காரை ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தியதற்காக வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
Edward Fitzalan-Howard 2002-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் ஏர்ல் மார்ஷலாக உள்ளார், மேலும் அவர் நார்போக்கின் 18 வது டியூக் ஆவார்.
அவர் லண்டனில் Battersea பகுதியில் சாலையில் தனது BMW காரை ஒட்டிச் செல்லும்போது, தனது மொபைல் போனில் பேசியபடி, சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருப்பதை கவனிக்காமல் சாலையை கடந்து சென்றார்.
இதனையடுத்து, அவர் சாலை விதிகளை மீறியதற்காக பிடிபட்டார், அவரும் விசாரணையில் தான் சாலையில் கவனம் செலுத்தவில்லை என்று அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
திங்கட்கிழமை காலை அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் அவர் ஏற்கனவே தனது பதிவில் கடந்தகால தண்டனைகளைக் கொண்டிருப்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு 800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மற்ற செலவுகளாக 400 பவுண்டுகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்ய உரிமம் தேவை என்று தன்மையுடன் வாதாடிய போதிலும், அவர் ஏற்கெனெவே பல முறை சாலை விதிகளை மீறி சில புள்ளிகளை இஸ்லந்துவிட்டதால், வேறு வழியில்லாமல் அவருக்கு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.