வீட்டுக்குள் இறந்துகிடந்த பெண்மணி: பேரனை சுட்டுக்கொன்ற பொலிசார்
அமெரிக்காவில், தனது பாட்டியைக் கொலை செய்ததாக தேடப்பட்டுவந்த சிறுவனை பொலிசார் சுட்டுகொன்றனர்.
வீட்டுக்குள் இறந்துகிடந்த பெண்மணி
அமெரிக்காவின் நார்த் கரோலினாவில், கோன்னீ லினென் (Connie Linen, 68) என்னும் பெண்மணி இறந்துகிடந்துள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், அவரது பேரனான 13 வயது சிறுவன் மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியுள்ளது.
அந்த சிறுவன் ஆளரவமற்ற ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன்பேரில் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.
ஆனால், பொலிசாரைக் கண்டதும் அந்தச் சிறுவன் ஒரு பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு பொலிசாரை நோக்கி முன்னேறியதாக கூறப்படுகிறது.
உடனே பொலிசாரில் ஒருவர் அந்தச் சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட, அவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |