'இது கிம் ஜாங் உன்னை அவமதிக்கும் செயல்' வட கொரியாவில் புதிய தடை அமுல்!
வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் பாணியை சாமானிய மக்கள் நகலெடுக்கக்கூடாது என்பதற்காக, லெதர் ஜாக்கெட்டுகள் மற்றும் டிரெஞ்ச் கோட்டுகளுக்கு வடகொரியா தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரேடியோ ஃப்ரீ ஏசியா (RFA), வட கொரியாவின் தலைவர்களின் ஃபேஷன் தேர்வுகளை பின்பற்றுவது அல்லது நகலெடுப்பது அவமரியாதை என்று அந்நாட்டு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, மலிவான சாயல்களை நிறுத்துவதற்காக, லெதர் ட்ரெஞ்ச் கோட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகளை பொதுமக்கள் அணிவதற்கு தடைசெய்யப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த பேஷன் பொலிஸார் தெருக்களில் ரோந்து வருவதாகவும், விற்பனையாளர்களிடமிருந்து ஜாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: Reuters
2019-ஆம் ஆண்டில் கிம் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தோன்றியபோது, லெதர் ட்ரெஞ்ச் கோட்டுகள் வட கொரியா நாட்டில் பிரபலமடைந்தன.
ஆரம்பத்தில், உண்மையான தோல் கோட்டுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவற்றை வாங்கக்கூடிய பணக்காரர்களிடையே பிரபலமாக இருந்ததாகவும் RFA கூறியது.
ஆனால் விரைவில் உள்ளூர் ஆடை தயாரிப்பாளர்கள் போலியான தோலை இறக்குமதி செய்து உள்நாட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்து, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வழங்கினர்.
இந்த ஆண்டு கிம் ஜாங் உன் மற்றொரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தோன்றிய பிறகு இந்த லெதர் ஜாக்கெட் மற்றும் ட்ரென்ச் கோட்களுக்கு தேவை மேலும் அதிகரித்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த 8-வது கட்சி காங்கிரஸில் நடந்த இராணுவ அணிவகுப்பின் போது, மிக Highest Dignity மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளும் தோல் கோட் அணிந்திருந்தனர்.
கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்கும் தோல் கோட் அணிந்திருந்தார். இந்த பேஷன் "சக்திவாய்ந்த பெண்களுக்கும் சின்னமாக" மாறியது.
சமீபத்தில், பியோங்சாங்கில் உள்ள பொலிஸார் கோட்டுகளை விற்பனையாளர்கள் மற்றும் பொது இடங்களில் அணிந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்யத் தொடங்கினர்.
அப்போது, பொது மக்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கோட் வாங்கியதாக ஆட்சேபித்த பிறகு, அதிகாரிகள், கிம் ஜாங் உன்னைப் போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிவது "உயர்ந்த கண்ணியத்தின் (Highest Dignity) அதிகாரத்தை சவால் செய்யும் தூய்மையற்ற போக்கு" என்று கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021