இது அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மை: மதுரோ சிறைப்பிடிக்கப்பட்டதற்கு வட கொரியா கண்டனம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அத்துமீறி கைது செய்ததற்கு வடகொரியா கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
வடகொரியா கண்டனம்
நேற்றும் அமெரிக்கா படைகள் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியதுடன் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தினர்.

இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அத்துமீறி சிறைப்பிடித்ததற்கு வடகொரியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை ஒரு நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய அத்துமீறல் என்றும் வடகொரியா கண்டித்துள்ளது.
வடகொரிய அரசு ஊடகம் KCNA வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் நடவடிக்கை “ஆதிக்க மனப்பான்மை கொண்ட செயல்” அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு வடகொரியா ஆதரவாக எப்போது நிற்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிக்கோலஸ் மதுரோவை அத்துமீறி சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் முகத்திரையை கிழிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |