அணு ஆயுதங்களை ஏவும் புதிய ராக்கெட் லாஞ்சர்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அதிரடி
வட கொரியாவின் அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட புதிய ராக்கெட் லாஞ்சரை அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய ராக்கெட் லாஞ்சர்
வட கொரியாவின் அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கில் கிட்டத்தட்ட 600 மி.மீ அளவுடைய புதிய ராக்கெட் லாஞ்சரை அந்நாட்டி ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதன்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட விழாவில் ராக்கெட் ராஞ்சரை அறிமுகப்படுத்தி பேசிய கிம் ஜாங் உன், இதனை வியப்பூட்டும் ஆயுதம் என்று புகழாரம் சூட்டினார்.

அத்துடன் இந்த ராக்கெட் அமைப்பு பயன்படுத்தப்பட்டால் பூமியில் உள்ள எந்தவொரு சக்தியாலும் இதனை தடுத்து நிறுத்த முடியாது என்று கிம் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 600 மி.மீ ராக்கெட் அமைப்பு மூலோபாய இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் இந்த புதிய ராக்கெட் அமைப்பினால், தென்கொரியாவில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியாவை தாக்குவதற்காகவே வடகொரியா இந்த ராக்கெட்டை தயாரித்து இருப்பதாகவும் ராணுவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |