உக்ரைனில் பழியாகும் வட கொரிய வீரர்கள்: ரஷ்யாவிற்கு அதிகரிக்கும் இராணுவ உதவி
போரில் வட கொரியா ரஷ்யாவுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரியவந்துள்ளது.
இராணுவ உதவி அதிகரிப்பு
உக்ரைனுடன் நீடித்து வரும் மோதலில் ரஷ்யாவுக்கு வட கொரியா தீவிரமாக இராணுவ உதவியை அதிகரித்து வருவதாக தென் கொரிய உளவு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
உளவுத்துறை அறிக்கைகள் DPRK (வட கொரியா) தற்போது உள்ள படைகளை மாற்றியமைத்தல் அல்லது கூடுதல் படைகளை ரஷ்யாவுக்கு அனுப்புதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றன.
அத்துடன் வட கொரியா காமிகேஸ் ட்ரோன்களை (Kamikaze Drone) உற்பத்தி செய்து ரஷ்யாவுக்கு விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை போரில் மதிப்புமிக்க போர் அனுபவத்தைப் பெறுவதற்கும் அதன் சொந்த ஆயுத அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கும் ஒரு மூலோபாய முயற்சியாகக் கருதப்படுகிறது.
வட கொரிய படைகளின் இழப்பு
தென் கொரிய தரவுகளின்படி, உக்ரைன் போரில் வட கொரியா கணிசமான இழப்புகளை சந்தித்துள்ளது, அதன்படி சுமார் 1,100 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இழப்புகளுக்கிடையேயும், பியோங்யாங் ரஷ்ய படைகளை வலுப்படுத்த கூடுதல் இராணுவ உபகரணங்களை அனுப்ப தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |