வட கொரியாவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு: வேளாண் கொள்கை குறித்து தீவிர ஆலோசனை
வட கொரியாவில் கோவிட் கால பேரழிவிற்கு பின்னர் கடுமையான தானிய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தானிய தட்டுப்பாடு
சமீபத்தில் விரோதப் படைகளுக்கு எதிராக அணு ஆயுத எதிர் தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக அதன் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இவ்வாறு போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கலுக்கு இடையில் கொரோனா தொற்று பாதிப்புகளும் வட கொரிய நாட்டை பெரும் அளவுக்கு சிக்கலில் தள்ளியுள்ளது.
Pen News
அந்த வகையில், கோவிட் கால பேரழிவிற்கு பின்னர், வட கொரியாவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதாகவும், ஆனால் பஞ்சம் என்ற அபாய நிலை ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வட கொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த தானிய தட்டுப்பாட்டால் பலர் பட்டினியால் சாகும் நிலை உருவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேளாண் கொள்கை குறித்து ஆலோசனை
இந்நிலையில் வட கொரிய தலைவர்கள் சரியான வேளாண் கொள்கையை அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
Associated Press
வட கொரியாவில் அதிகரித்து வரும் இந்த உணவு தானிய தட்டுப்பாட்டை சரியாக கையாளத் தவறினால், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் அணு ஆயுத திட்டங்களுக்கு மக்கள் ஆதரவை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.