கிழக்கு கடலை நோக்கி பாய்ந்த வட கொரிய ஏவுகணை: தென் கொரிய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை
ஜப்பானின் கடலை நோக்கி(கிழக்கு கடல்) வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தென் கொரிய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணை பறக்கும் பாதை, அதன் தூரம் மற்றும் உயரம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதேபோல் இந்த அடையாளம் தெரியாத ஏவுகணை குறித்து வட கொரிய அரசு ஊடகமும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை நடவடிக்கையானது சமீபத்திய ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து UFS கூட்டு ராணுவ பயிற்சியை முன்னெடுத்து இருந்தனர்.
இந்த பயிற்சி தொடங்குவதற்கு சற்று முன்னதாக வட கொரியாவின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் பதில் நடவடிக்கை
வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலை தொடர்ந்து அமெரிக்க - தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியின் அளவை குறைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
மேலும் பெரிய அளவிலான ராணுவ பயிற்சிகள் தேவையற்ற விரோத போக்கை தூண்டுவதாக அவர் வாதிட்டார்.
வட கொரியாவின் இந்த திடீர் ஏவுகணை ஏவுதல் அச்சுறுத்தலாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் கூட்டு ராணுவ பயிற்சியின் ஏற்பாடுகள் ரத்து செய்ய முடியாத அளவு ஏற்கனவே முழுமையாக செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்து இருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |