அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி: மர்மமான ஏவுகணையை ஏவிய வட கொரியா
வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை
புதன்கிழமை வடகொரியா ராணுவம் சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கடல் பிராந்தியத்தில் ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏவுகணை கடலில் விழுந்து இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் நடத்தப்படும் வட கொரியாவின் இரண்டாவது ஆயுதச் சோதனை இதுவாகும்.
ஜப்பானை தொடர்ந்து, தென்கொரியாவும் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி
அமெரிக்கா - தென்கொரியா இடையே அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ பயிற்சி தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வந்த இரண்டு நாட்களில் வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
பிராந்திய மற்றும் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் Ulchi Freedom Shield என்று அழைக்கப்படும் கூட்டுப் பயிற்சி வட கொரியாவை எரிச்சலடைய செய்துள்ளது.
ஏனென்றால் இந்த போர் பயிற்சியானது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான ஒத்திகையாக அது கருகிறது.
தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பிறகு வடகொரியாவின் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |