மரணத்தின் தேவதை... வடகொரியாவின் கொடூர தளபதிக்கு முக்கிய பொறுப்பு: கிம் ஜோங் அதிரடி
வடகொரிய இரணுவ வட்டாரத்தில் மரணத்தின் தேவதை என குறிப்பிடப்படும் கொடூர தளபதி ஒருவருக்கு முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளார் கிம் ஜோங் உன்.
வடகொரியாவின் தலைவராக 2011ல் கிம் ஜோங் உன் பொறுப்புக்கு வந்த பின்னர், அரசியல் வட்டாரத்தில் அவருக்கிருந்த எதிராளிகளை மொத்தமாக இலக்கு வைத்து அழித்தவர் ஜோ கியோங்-சோல்.
இவருக்கே தற்போது புதிய பொறுப்புகளை அளித்துள்ளார் கிம் ஜோங் உன். கிம் ஜோங்கின் தாய்மாமன் உட்பட வடகொரியாவின் செல்வாக்கு மிகுந்த மூத்த அதிகாரிகள் பலரை கிம் ஜோங் உன் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க ஒழித்தவர் என்பதால் ஜோ கியோங்-சோலுக்கு இராணுவ வட்டாரத்தில் மரணத்தின் தேவதை என புனைப்பெயர் சூட்டப்பட்டது.
இதுவரை வடகொரியாவின் இராணுவ பாதுகாப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜோ கியோங்-சோல், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த முடிவெடுக்கும் அமைப்பில் புதிதாக உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டின் முடிவெடுக்கும் அமைப்பில் ஜோ கியோங்-சோல் தற்போது உட்படுத்தப்பட்டுள்ளது, வடகொரியாவின் ஆட்சி அதிகாரங்களை கிம் ஜோங் உன் மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இதனால், இனி இவர்கள் இருவரின் ஆட்டம் வடகொரியாவில் கடுமையாக எதிரொலிக்கும் எனவும், அண்டை நாடுகளிலும் அதன் தாக்கம் இருக்கும் எனவும் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவெடுக்கும் அதிகார சபையில் ஜோ கியோங்-சோல் இணைக்கப்பட்டுள்ளதால், இனி அவர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தலாம். மேலும், வடகொரியாவின் அதிகார வட்டத்திற்கு, அதன் பல அடுக்குகளுக்கும் ஜோ கியோங்-சோல் ஊடாக கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.