தென் கொரியாவின் தலைநகரை மொத்தமாக அழிக்கும் ஆயுதம்: பாராட்டிய வட கொரியாவின் கிம்
தென் கொரியாவின் தலைநகரை மொத்தமாக அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சோதனைகளைப் பாராட்டியுள்ளார் வட கொரியாவின் கிம் ஜோங் உன்.
அணுசக்தித் திட்டம்
வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பல ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைக்கான போர்க்குண்டு உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களின் சோதனைகளை கிம் ஜோங் உன் மேற்பார்வையிட்டுள்ளார்.

எந்தவொரு எதிரியும் வட கொரியாவை எதிர்கொள்ளத் துணியாதவாறு பார்த்துக்கொள்ள, தேசியப் பாதுகாப்பு மேம்பாட்டின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
தென் கொரியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரையில் செய்துகொள்ளாத வட கொரியா, அமைதி ஒப்பந்தம் மட்டுமேசெய்து கொண்டுள்ளதால், இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக தற்போதும் போர் முனையில் உள்ளது.
ராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியா, அமெரிக்காவையும் தென் கொரியாவையும் தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப் போவதாக அதன் தலைவர்கள் சூளுரைத்த அணுசக்தித் திட்டம் காரணமாகப் பல கட்டத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் கொரிய தீபகற்பத்தின் நிலைமை குறித்து விவாதித்ததைத் தொடர்ந்து, வட கொரியா சமீப நாட்களில் பாதுகாப்பு தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பேரழிவு தரும் சேதம்
இந்த நிலையில், தற்போது சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சர்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு, அதன் இலக்கு 90 கி.மீ என அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரிய நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கு அருகிலுள்ள இடங்களிலிருந்து சியோல் பெருநகரப் பகுதியின் சில பகுதிகளைச் சென்றடைய இது போதுமானது.

மட்டுமின்றி, எதிரியின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளுக்குப் பேரழிவு தரும் சேதத்தை விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டது எனவும் அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சோதனை முடிவுகளில் திருப்தி தெரிவித்த கிம், மேம்பட்ட தானியக்கம், நீண்ட தூர இலக்கு மற்றும் அதிக துல்லியம் ஆகியவற்றின் மூலம் தெற்கு எல்லையில் தாக்குதல் திறனை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தச் சோதனைகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அணு ஆயுத மேம்பாடு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு தடைகளுக்கு வடகொரியா உட்பட்டுள்ளது; எனினும், இத்தடைகளை அந்நாடு தொடர்ந்து மீறி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |