வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை... ரூ 12,650 கோடியை சுருட்டிய வடகொரிய அமைப்பு
பிரபலமான Bybit கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் இருந்து 1.46 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவத்தில் அதிரவைக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Lazarus ஹேக்கர்கள்
வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை வடகொரியாவின் Lazarus என்ற அமைப்பு முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
Bybit கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் எத்தேரியம் சேமிப்பில் ஊடுருவிய Lazarus ஹேக்கர்கள், அங்கிருந்து 1.46 பில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளனர்.
இந்திய மதிப்பில் ரூ 12,650 கோடி என்றே கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் இருந்து செயல்படும் Bybit கிரிப்டோகரன்சி நிறுவனம் குறித்த கொள்ளை சம்பவத்தை உறுதி செய்துள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த கொள்ளையின் போது மற்ற 60 மில்லியன் பைபிட் பயனர்களில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பைபிட் தலைமை நிர்வாக அதிகாரியான Ben Zhou தமது சமூக ஊடக பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
15 பில்லியன் பவுண்டுகள்
அதில், இந்த கொள்லை சம்பவத்தில் இழந்ததை மீட்டெடுக்காவிட்டாலும் பைபிட் நிறுவனத்தால் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும், அனைத்து வாடிக்கையாளர் சொத்துக்களும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இழப்பை எங்களால் ஈடுகட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து பைபிட் வாடிக்கையாளர்கள் 350,000 பேர்கள் தங்கள் முதலீடு தொகையை திரும்பப்பெற கோரியதாகவும்,
அவர்கள் அனைவருக்கும் அவர்களின் தொகையை வழங்க நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Ben Zhou தெரிவித்துள்ளார். 2018ல் துவங்கப்பட்ட பைபிட் நிறுவனத்தின் மொத்த சொத்துமதிப்பு 15 பில்லியன் பவுண்டுகள் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |