அதிபயங்கர ஆயுதத்துடன் ஜப்பானுக்குள் நுழைந்த வட கொரிய கப்பல்!
அதிபயங்கர ஆயுதத்துடன் வட கொரிய ரோந்து கப்பல் ஒன்று ஜப்பானுக்குள் கடல் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் வட கொரிய ரோந்து கப்பல்களில் ஒன்று பயங்கர ஆயுதத்துடன் நுழைந்ததை ஜப்பான் கடலோர காவல்படை கண்டறிந்துள்ளது.
வட கொரிய ரோந்து கப்பல்களிலில் ஒன்று, மனிதனால் எளிதில் தூக்கிச் இயக்கக்கூடிய தரையிலிருந்து விண்ணை நோக்கி பாயும் ஏவுகணை அமைப்பு கொண்டிருந்ததாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை அமைப்பு குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை தாக்குவதில் வல்லமை படைத்தது என கூறப்படுகிறது.
ஜப்பான் கடலில் MANPADS உடன் வட கொரிய கப்பல் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடர்ந்து நாட்டின் மீன்பிடி கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.