அமெரிக்கா, இந்தியா நாடுகளை கடுமையாக சாடிய வடகொரியா
அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தியதற்காக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் குழுவை வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.
சைபர் அச்சுறுத்தல்
அத்துடன் வடகொரியாவில் இருந்து சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக கட்டுக்கதைகளையும் அமெரிக்கா பரப்புவதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் கைவசம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.
இதன் காரணமாகவே இதுவரை எந்த நாடும் வடகொரியாவை சீண்டுவதில்லை. சமீபத்தில் ஈரான் விவகாரம் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மோதலாக வெடித்த நிலையில், அணு ஆயுதங்களை கைவிட பொதுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் குழுவை வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.
இதனிடையே வட கொரியாவின் ஐடி பணியாளர் திட்டம் என்று அழைக்கப்படுவதை குறிவைத்து கைது செய்து குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை கடந்த மாதம் அறிவித்தது.
இந்த திட்டமூடாக வட கொரியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் தொலைதூர ஐடி தொடர்பான பதவிகளைப் பெறுகிறார்கள், மட்டுமின்றி, அந்த அணுகலைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களிலிருந்து பணத்தையும் தகவல்களையும் திருடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |