தென் கொரியாவிற்கு ஏவுகணை விற்பனை ஒப்புதல்., அமெரிக்காவிற்கு வட கொரியா கண்டனம்
அமேரிக்கா தென் கொரியாவிற்கு மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்ததை வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது.
இந்த நடவடிக்கை, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என வட கொரியா எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான மேம்பட்ட air-to-air ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை தென் கொரியாவிற்கு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
இது போருக்கான ஏற்றுமதி என வடகொரியா விமர்சித்துள்ளது.

வடகொரியாவின் வெளியுறவு கொள்கை இயக்குநர், "வாஷிங்டன் மற்றும் சியோல் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு முறையாக வலுப்படுத்தப்படுகிறது. இது பிராந்தியத்தில் அதிகார சமநிலையை குலைக்கும்" என KCNA செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
வட கொரியா, தன்னுடைய பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்ளும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா-தென்கொரியா இராணுவ ஒத்துழைப்பை, போருக்கான தயாரிப்பாகவே வடகொரியா தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |