தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா!
தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) 2017-க்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை 1,100 கி.மீ. தூரம் (684 மைல்கள்) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்த பிறகு ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த ICBM ஏவுகணைகள், வாடா கொரியாவிலிருந்து அமெரிக்க நிலப்பரப்பு வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
PC: Getty Images
வடகொரியாவின் இந்த சோதனையானது ஒரு பெரிய விரிவாக்கமாக பார்க்கப்படுகிறது மற்றும் இந்த சோதனைக்கு அதன் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
பியோங்யாங் செயற்கைக்கோள் ஏவுதல் என்று கூறிய சில சோதனைகள் உண்மையில் ICBM அமைப்பின் சில பகுதிகளின் சோதனைகள் என்று அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.